சவால்களை சமாளிக்க இளைஞர்களுக்கு எவ்வாறு உதவுவது?

Posted by Akshay Salaria on Mar 26, 2021 7:22:28 PM
Akshay Salaria
parent-child-bonding

ஒரு இளைஞனை வளர்ப்பது கடினம். ஆனால், இளைஞனாக இருப்பது மிகவும் கடினம் ஆகும். அதனால்தான் நாம் நம் குழந்தைகளுக்கு நம்பிக்கை உரியவர்களாக இருக்க வேண்டும். அவர்களுக்கு ஆலோசனைகள் தேவைப்படும்போது அதை வழங்க தயாராக வேண்டும். வாழ்க்கையின் நல்ல, கெட்ட மற்றும் அசிங்கமான அனுபவங்களை அவர்களிடம் நாம் பகிர்ந்துகொள்ள வேண்டும். குழந்தைகளின் வாழ்க்கை நடைமுறையில், அவர்களுக்கு எப்போதுமே, நாம் முன்மாதிரியாக திகழ்ந்து அவர்களின் மனதில் உயரிய எண்ணங்கள் ஏற்பட காரணமாக இருக்க வேண்டும். 

இளமை பருவம், நம் வாழ்க்கையின் மிக கடினமான பருவம் ஆகும். பெற்றோரிடமிருந்தும், ஆசிரியர்களிடம் இருந்தும் மிகுந்த ஆதரவை இளைஞர்கள் விரும்பும் காலம் இது ஆகும். தாங்கள் இந்த பருவத்தை எப்படி உணர்கிறோம் மற்றும் தங்களை இந்த சமூகம் எப்படி வைத்திருக்கிறது என்பது குறித்து அவர்கள் எப்போதும் குரல் கொடுப்பதில்லை. இது அவர்களின் கற்றல் திறனை பாதிக்கிறது. இந்த சவாலான காலகட்டத்தில், பெற்றோர்களும், ஆசிரியர்களும் அவர்களுக்கு உதவ வேண்டும்.

குழந்தை வளர்ப்பில், பெற்றோர்களின் ஆரம்பகால தலையீடு என்பது மிக முக்கியமானது ஆகும். உங்களது குழந்தை தங்களது எண்ணத்தை வெளிப்படுத்துகிறாரா அல்லது இல்லையா என்பதை, ஆண் பிள்ளை அல்லது பெண் பிள்ளையானாலும், அவர்களை எல்லா நேரங்களிலும் நாம் கண்காணிக்க வேண்டும். உங்களின் ஆரம்பகால தலையீடு, அவர்கள் தங்களின் கஷ்டங்களை சமாளிக்கவும், குழந்தைகள் தங்களது பள்ளிக்காலங்களில் ஏற்படும் உளவியல் சிக்கல்களில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ளவும் இது உதவுகிறது.  

ஒரு இளைஞனின் மனதை புரிந்து கொள்வதற்கான சவால்களை நாம் தெரிந்து கொள்வதன் மூலம், அவர்களுக்கு ஏற்படும் சவால்களை சமாளிக்க நாம் அவர்களுக்கு உதவ முடியும்.

  • அவர்களுக்கு உதவும் முன்னர், நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

உங்கள் குழந்தை, கல்வி ரீதியாக சிக்கலை எதிர்கொள்ள நேரிடும்போது, நாம் மாணவராக மாறி அவர்களுக்கு உதவ முன்வர வேண்டும். நம்பிக்கையை ஏற்படுத்தவல்ல, நிலையான ஆதார வழிக்கல்வி முறையில் அவர்களுக்கு கற்பிக்க திட்டமிடுங்கள்.  துறைசார்ந்த நிபுணர்களுடன் நேரிலோ அல்லது ஆன்லைன் முறையிலான பயிற்சிகளில் அவர்களை ஈடுபடுத்துங்கள். நம்பகமான கண்ணோட்டங்களில் உள்ள புத்தகங்களை அவர்களை வாசிக்க பழக்குங்கள்.

தேவையான ஆதாரங்கள் மற்றும் அறிவுறுத்தல்கள் இல்லாமல், கடினமான பாடங்களை கற்பிப்பது, உங்கள் குழந்தைகளின் புரிதலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆசிரியர்கள், இதை சமமானு உணர்ச்சி மற்றும் கற்றல் பயிற்சியின் மூலமாகவே, இதை அவர்கள் கடக்க முடியும். மாணவர்களின் தவிர்க்க முடியாத கேள்விகளுக்கு எவ்வாறு பதில் அளிக்க வேண்டும் என்பதை பெற்றோர்களும், ஆசிரியர்களும் அறிந்து இருக்க வேண்டும்.

  • ஒரு ஆதரவான கலாச்சாரத்தை உருவாக்குங்கள்

குழந்தைகள் தங்களது கவலைகளை சுதந்திரமாக வெளிப்படுத்த, தடைகள் ஏதும் அற்ற மற்றும் முழு ஆதரவிலான கலாச்சாரத்தை உருவாக்க பெற்றோர்கள் தங்களது பொன்னான நேரத்தை முதலீடு செய்ய வேண்டும். கற்றல் பயிற்சி மற்றும் வாழ்க்கை கூறுகளுக்கு இடையிலான தொடர்புகளை உருவாக்க மற்றும் ஆராய, குழந்தைகளுக்கு நாம் உதவ வேண்டும். இந்த பருவத்தில், ஒவ்வொரு நிகழ்வும் மிக முக்கியமானது ஆகும். மனிதர்களாகிய நாம் பகிர்ந்து கொள்ளும் உணர்வுகள், அவர்கள் சார்ந்த நேரம், புவியியல் அல்லது அவர்கள் சார்ந்த கலாச்சாரத்தை பொருட்படுத்தாமல், மற்றவர்களுடனான அனுபவங்களில், அவர்கள் தங்களை இணைத்துக்கொள்ள இது உதவும்.

  • அவர்களின் கவலைகளை கேளுங்கள் மற்றும் புரிந்து கொள்ளுங்கள்

உங்கள் குழந்தைகளுடன் பச்சாதாபம் செய்துகொள்ள நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அவர்களின் குறைபாடுகள் மற்றும் தவறுகளை பற்றி கவலைப்படுவதற்கு பதிலாக, நீங்கள் அவர்களின் உதவும் கரமாக மாற வேண்டும். இந்த உலகில், யாரும் சிறந்தவர்கள் இல்லை என்பது அவர்களுக்கு கற்றுத்தர வேண்டும். முழுமையை தேடுவதற்கு பதிலாக, அவர்கள் ஒவ்வொரு நாளும் சிறந்த மனிதராக மாற முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

  • உண்மையான வாழ்க்கை அனுபவங்களை முன்னிலைப்படுத்த வேண்டும்

ஆசிரியர்களும் பெற்றோர்களும் மாணவர்களை ஊக்குவிக்க, உண்மையான வாழ்க்கையின் உதாரணங்களை பயன்படுத்த வேண்டும். அவர்களின் செயல்திறனை அதிகரிக்க, மதிப்புள்ளவர்களின் அனுபவங்களை பகிர்வதற்கு முன்னிலைப்படுத்தவும். மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கும்போது, மற்றவர்கள் அவர்களை கவர, கடின உழைப்பு மேற்கொள்ள வேண்டியதாக உள்ளது.

மாணவர்கள் தங்களது மனஅழுத்தத்தை சமாளிக்க LEAD எவ்வாறு உதவுகிறது?

LEAD திட்டத்தில், தங்களது பங்குதாரர்களுடன் அது இணைந்து, அது முன்பைவிட, மாணவர்களுடனான தொடர்பு ஏற்படுத்துவதை அது சாத்தியம் ஆக்கியுள்ளது.  LEAD வழிமுறையின் படி இயங்கும் SCHOOLS எல்லா நேரங்களிலும், குழந்தைகளின் உணர்ச்சி மற்றும் உளவியல் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் வகையில் உள்ளன. LEAD ஒவ்வொரு வாரமும் சமூக மற்றும் உணர்ச்சி கற்றல் அமர்வுகளுக்கு (Social and Emotional Learning sessions (SEL)) ஏற்பாடு செய்கிறது. இது குழந்தைகளின் உணர்ச்சிகளை நிர்வகித்து, அவர்கள் அடைய வேண்டிய இலக்குகளை நிர்ணயிக்க இது உதவுகிறது. இந்த நோக்கங்கள், குழந்தைகளிடையே, நேர்மறையான எண்ணங்களை வளர்ப்பதோடு, குழந்தைகளின் இளம் மனதில், அனைத்து வகையான வளர்ச்சிகளுக்கும் ஊக்கமாக அமைகின்றன.

ஹைபிரிட் மற்றும் கலவையான கற்றல் திறனானது, ஒரு வகுப்பில் கேள்விகளை கேட்க கூச்சப்படும் மாணவர்களையும், இதில் பங்கேற்க ஊக்கம் அளிக்கிறது. பாடங்களை மாணவர்கள் முழுமையாக புரிந்துகொள்ள, வீடியோ விரிவுரைகளை, அவர்கள் தாங்கள் விரும்பும்நேரத்தில், எப்போது

வேண்டுமானாலும் அவர்கள் எளிதாக இயக்கி கொள்ளலாம். உங்கள் குழந்தையின் கல்வித்திறனின் ஒருங்கிணைந்த குறிக்கோளுக்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் schoolக்கு இடையே, ஒரு இணக்கமான உணர்வை, LEAD உறுதி செய்கிறது.

குழந்தைகளின் படிப்பு விவகாரத்தில், பெற்றோர்களின் ஈடுபாடு என்பது மிகவும் முக்கியமானது ஆகும். குழந்தைகளின் செயல்திறன் அறிக்கைகள், மேலதிக மற்றும் வீட்டிலேயே கற்றலுக்கான வீடியோக்கள், அலகு முன்னேற்றம், வகுப்பறைகளில் இருந்து வரும் படங்கள் போன்றவைகளை LEAD வழங்குவதால், குழந்தைகளின் விரைவான வளர்ச்சி மற்றும் கற்றல் திறன்களில், பெற்றோரையும் ஈடுபட வைக்கிறது.

உங்கள் குழந்தைகளுக்கு சிறந்த கல்வியை கொடுக்க விரும்புகிறீர்களா? மற்றும் அவர்களை எதிர்காலத்திற்கு தயார்படுத்த விரும்புகிறீர்களா?. அவர்களை உடனே, LEAD வழிமுறையின் கீழ் இயங்கும் schoolலில் அவர்கள் படிப்பதை இன்றே உறுதி செய்யுங்கள்  https://bit.ly/3qyCF95

About the Author
Akshay Salaria
Akshay Salaria

Akshay is a Senior Marketing Manager at LEAD School. He is a digital marketing professional with experience in marketing and sales. His journey in teaching/education started as a volunteer at Teach India where he realised the importance of good quality teaching and also realised that not everyone in this country has had the privilege that he had at schooling.

LinkedIn